யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 40
________________________________________________________
ஆத்மவிசாரம் அல்லது ஆத்ம அன்வேஷணம்
வசிஷ்டர் தொடர்ந்து முக்திக்கான மார்க்கம் என்ன என்று விளக்குகிறார்:
“ சுயக்கட்டுப்பாடு அடைந்தவுடன் நாம் எதிர்கொள்கின்ற இரண்டாவது காவல்க்காரன் ஆத்ம விசாரம் என்பதாகும். ஆத்ம விசாரம் என்றால் நமது நுண்ணறிவால் எதையும் பகுத்தறிவது; நன்மை-தீமைகளைஆராய்ந்து ஆத்மாவை அடையாளம் காணுதல் என்று பொருள்..
ஆத்ம விசாரம் [வேத சாஸ்திரங்கள் தருகின்ற வெளிச்சத்தின் உதவியுடன்] ,நிர்மலமான புத்தியை பயன் படுத்தி செய்ய வேண்டிய செயல். இந்த விசாரம் இடைவெளியில்லாத தொடர்ந்து செய்ய வேண்டிய கர்ம்ம்ம். அப்படி செய்யும்பொழுது நமது புத்தி கூர்மையானதாகவும் பரம சாக்ஷாத்காரத்திற்கு தகுதியுடையதாகவும் ஆகும்.
அது தான் சம்சாரக்கடலிலிருந்து மீள்வதற்கு உத்தமமான மார்க்கம். புத்தி சாதுரியம், செயலாற்றும் திறன், சமயோசிதமான நடவடிக்கைகள் என்பவை இப்படிப்பட்ட விசாரத்தின் இன்றிமையாத அம்சங்கள்..
யோசனையில்லாத முட்டாள்கள் அனுபவிக்க நேரிடுகின்ற துன்பங்களிலிருந்து, விசார மார்கத்தை பின்பற்றும் புத்திசாலி.முக்தனாவான்
விசாரம் அல்லது தேடலை நாடவேண்டும் என்ற ஆர்வம் இல்லாதவர்களுக்கு
நிலாவின் குளிர்மை கூட அச்சமுளவாக்கின்ற ஆயுதங்களாகத் தென்படும். அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் அவர்கள் தினம் தினம் பயத்தினால் மரித்துக் கொண்டிருப்பார்கள்.அவர்கள் துன்பத்தின் களஞ்சியமாகத்தான் இருப்பார்கள். அவர்கள் செய்கின்ற கர்மங்கள் அவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் துன்பத்தைத் தான் தரும்.
ஆகவே அப்படிப்பட்டவர்களுடன் சஹவாசம் வைத்துக் கொள்வதே துன்பத்திற்கு காரணமாகலாம்.
யார் விசார மார்கத்தில் சஞ்சரித்து ஆத்மாவை கண்டறியும் உத்வேகம் உள்ளவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தை ஒளிமயமாக்குகிறார்கள். யாரெல்லாம் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார்களோ அவர்களேல்லாம். ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகிறார்கள்
விசார மார்க்கம் அஞ்ஞானத்தினால் உண்டாகக்கூடிய பயம் எனும் பேயை நாசமடைய செய்கின்றது.
ஆத்ம விசாரம் புலன்களின் தூண்டுதலால் நாம் தேடக்கூடிய பௌதிக சுகங்களின் பொருளின்மையை தெளிவு படுத்துகின்றது.
அழிவில்லாத்தும், மாற்றங்களுக்குட்படாததும் ஆன சத்தியத்தை பற்றி உள்ள அறிவு இந்த ஆத்ம விசாரத்தினால் நமக்கு கிடைக்கிறது. இது தான் உத்தம ஞானம்.
இந்த ஞானம் பெற்று விட்டோமென்றால் நமக்கு விஷயாசக்தியிராது;அதே நேரத்தில் கர்மங்களிலிருந்து விடுபட்டபவனாகவோ, கர்மங்களில் மட்டும் முழ்கியிருப்பவானாகவோ இருக்க மாட்டோம்.
அப்படிப்பட்ட ஞானிகள் மற்றவர்கள் பார்வையில் எல்லோரையும் போல் வாழ்ந்து இறக்கிறார்கள். ஆனால் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் காலமத்தனையும் ஆன்ந்தபூரணனாக இருப்பான். எதுவும் அவனை பாதிக்காது.
_________________________________________________________________________________
தினசரி வாழ்க்கையின் நித்தியகர்மங்களின் அழுத்தத்தால் கூட தேடல் நிற்க கூடாது..
உலக வாழ்க்கை இடைவிடாது எழும் ஆசைகளால் பல பல புதிய கஷ்டங்கள் உண்டாகிக் கொண்டேயிருக்கும்.அதை அழிப்பதற்கு எளிய வழி விசார மார்க்கமேயாகும்.
இராமா ! நமது ஆற்றலும் செல்வமும் முக்தியும் மற்றும் யாவையும் பகுத்தறிவுடன் கூடிய விசார மார்க்கத்தில் சஞ்சரிப்பதால் உண்டானது தான்.
இராமா ! அறியாமையால் உண்டாகும் சோம்பலைத் தவிர்.
நல்ல அறிவில்லாதவர்களைத் தவிர். விஷச் செடிகளைப் போல் துன்பம் விளைவிப்பவர்கள் அவர்கள். அவர்களை விட்டு விலகிச் செல்.
_________________________________________________________________________________
பகுத்தறிவு விசாரம் உல்கின் மாயத்திரையை அகற்றி உண்மையை உனக்குக் காண்பிக்கும்.
உலகில் யாவையும் முதலில் அழகாகத் தோன்றும். பகுத்தறிவு விசாரத்தின் முடிவில் அவைகளின் உண்மை சொரூபம் வெளிப்படும்.
இந்த பகுத்தறிவு விசாரம் என்பது தான் என்ன?
அது வேறு ஒன்றுமில்லை;
‘நான் யார்?’ என்று நம்மை நாமே கேட்டு அதன் விடையைக் காண்பது தான்..
அப்படி ‘நான் யார்’ என்ற கேள்விக்கு விடை தேடிப் போகும்பொழுது,
இந்த உலகம் எப்படி உண்டாயிற்று,
உண்மையில் இந்த பிரபஞ்சம் என்பது என்ன,
அது முடிவில் என்னவாகும் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும்.
_________________________________________________________________________________
வசிஷ்டர் மேலும் கூறுவார்:
வேத சாஸ்திரங்களை நன்றாக கற்று மற்ற அறிஞ்ர்களுடன் சர்ச்சை செய்து வாசனைகள் எல்லாவற்றையும் துறந்து, ஆந்தரிகமான மௌனம் நேடுவதில் சிறந்தது வேறொன்றுமில்லை.
_________________________________________________________________________________